ஓவ்வொரு மழையிலும் என்னை, ஊதா பூ தேடவைக்கிறாய்

உன்னை முதலும்,கடைசியுமாக
பார்த்த நுன் நொடிகள்
எப்போதோ கேட்ட பாடல்
தேர்வறை சிந்தனையில் நுழைவதுபோல்
மழை நேரத்திலான சாலைப் பயணங்களில்
என்னை வந்து சேர்ந்துவிடுகிறது…

அப்படி என்ன தான் செய்தாய்
என் நினைவு மடிப்புகளை
மிகச்சில நுண் நொடிகள் தான் உன்னை
பார்த்தேன்..

மழை துளிகள் என் கண்களை
தொட்டு உன்னை மறைக்க நினைத்த
பொழுதுகளில்..

நீர் துளி தெறித்த லென்ஸ் வழி பார்ப்பது போல்
ஓர் தெளிவில்லா உருவமாகத்தான் பதிந்தாய்..

மழையில் நனைந்தும் நனையாத ஊதாப்பூவாய்..
உன் உடையின் நிறம் நியாபகம் இருக்கிறது..
நீ வைத்திருந்த குடையின் இருந்த மயிலின்
ஆட்டமும் நியாபகம் இருக்கிறது…
ஆனால்,
உன் அழகிய முகத்தில் விழிகள் மட்டும் தான் நியாபகம் இருக்கிறது..

அன்று என் நனைந்த விழிகளும்,
உன் நனையா விழிகளும்
சந்தித்த அந்த மிக நுண்ணிய பொழுதில்..
எப்படியோ என் நினைவில் பத்திந்துவிட்டாய்..

இனி ஊரை நனைக்கும் ஓவ்வொரு மழையிலும்
என்னை, ஊதா பூ தேடவைக்கிறாய்…

1