இயற்கை மீது காதல் கொள்ள வைக்கும் : வனமகன்

காடும் காடு சார்ந்த படத்தில், கணிணி கவிஞனின் சொல் விளையாட்டிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் பாடல்கள் அனைத்தும் நிஜ காட்டின் ரம்யத்தன்மையுடன் இருக்கிறது.

ஆல்பமில் கேட்டதும் நம்மை சட்டென தழுவி கட்டிப்போடும் பாடல் “யம்மா ஏ அழகம்மா” காட்டின் பிள்ளையை கண்டு வியக்கும் ஓர் காரிகை. அவனின் வெள்ளையுள்ளம் கண்டு விழியுயர்த்தி தன் ஐயம் அனைத்தையும் கேட்கிறாள் பாடலாக!

“ஒரு சில நொடி குழந்தயைபோலே
மறு சில நொடி கடவுளை போலே
பல சில நொடி அதனினும் மேலாய் நீயானாய்”

காட்டின் வனப்பையும் இயற்கையின் அபரிமிதமான அழகையும் ரசிக்க வைக்கும் பாடல், மென்மையான இசை விஜயேசுதாஸின் குரல் என இதை கேட்டதும்  நிச்சயம் வனம்புக தூண்டும், இயற்கையுடன் ஒன்றி வாழ நிச்சயம் தூண்டும்.

“சொர்க்கம் இது தானம்மா
மேலே கிடையாதாம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா”

வனமகன் மனிதன் வாழும் எல்லைக்குள் நிழைந்தால் அவன் எதை எல்லாம் எதிர் கொள்ள வேண்டும், நாம் எதை எல்லாம் சகித்து வாழ்கிறோம் என இயந்திரதனமான வாழ்கையின் சில பதிவுகள்.

“ஒரு accident-அ பாத்து selfie எடுத்தா
கலைஞன் டா நீ கலைஞன் டா
…..
உடையா உணவா உறவா ஒடனே
நீ Google–ல் தேடு”

Vanamagan-Movie-First-Look-Posters-2
காதல் கொள்ளும் காட்டின் மகன், இயற்கை ரசிக்கும் நகரத்து காரிகை. வனத்தை ரசிக்கிறாள் இயற்கையின் உவமை கொண்டு இருவரும் காதல் பாடுகிறார்கள். அப்புறம் என்ன நமக்கு ரசித்து கேட்க ஒரு மென்பாடல்.

“இலைகள் அனிந்த பூஞ்சிலையே
மனம் இலையுதிர் காலம் கேட்குதடி”

தீம் மியூசிக் – எப்போதும் போல் ஹாரிஸ் படத்தின் தளத்தை பிரதிபளிக்கிறார். 50வது படம் கேட்க்கவா வேண்டும்.

அனைத்து பாடல்களையும் திகட்ட திகட்ட இயற்கை குழைத்து எழுதிய கார்க்கி-க்கு நிச்சயம் சில பல கொத்துகள் அனுப்பலாம்.

வனமகன் – இயற்கை மீது காதல் கொள்ள வைப்பான்

உங்கள் கருத்துக்கள்