இயற்கை மீது காதல் கொள்ள வைக்கும் : வனமகன்

காடும் காடு சார்ந்த படத்தில், கணிணி கவிஞனின் சொல் விளையாட்டிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் பாடல்கள் அனைத்தும் நிஜ காட்டின் ரம்யத்தன்மையுடன் இருக்கிறது.

ஆல்பமில் கேட்டதும் நம்மை சட்டென தழுவி கட்டிப்போடும் பாடல் “யம்மா ஏ அழகம்மா” காட்டின் பிள்ளையை கண்டு வியக்கும் ஓர் காரிகை. அவனின் வெள்ளையுள்ளம் கண்டு விழியுயர்த்தி தன் ஐயம் அனைத்தையும் கேட்கிறாள் பாடலாக!

“ஒரு சில நொடி குழந்தயைபோலே
மறு சில நொடி கடவுளை போலே
பல சில நொடி அதனினும் மேலாய் நீயானாய்”

காட்டின் வனப்பையும் இயற்கையின் அபரிமிதமான அழகையும் ரசிக்க வைக்கும் பாடல், மென்மையான இசை விஜயேசுதாஸின் குரல் என இதை கேட்டதும்  நிச்சயம் வனம்புக தூண்டும், இயற்கையுடன் ஒன்றி வாழ நிச்சயம் தூண்டும்.

“சொர்க்கம் இது தானம்மா
மேலே கிடையாதாம்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா”

வனமகன் மனிதன் வாழும் எல்லைக்குள் நிழைந்தால் அவன் எதை எல்லாம் எதிர் கொள்ள வேண்டும், நாம் எதை எல்லாம் சகித்து வாழ்கிறோம் என இயந்திரதனமான வாழ்கையின் சில பதிவுகள்.

“ஒரு accident-அ பாத்து selfie எடுத்தா
கலைஞன் டா நீ கலைஞன் டா
…..
உடையா உணவா உறவா ஒடனே
நீ Google–ல் தேடு”

Vanamagan-Movie-First-Look-Posters-2
காதல் கொள்ளும் காட்டின் மகன், இயற்கை ரசிக்கும் நகரத்து காரிகை. வனத்தை ரசிக்கிறாள் இயற்கையின் உவமை கொண்டு இருவரும் காதல் பாடுகிறார்கள். அப்புறம் என்ன நமக்கு ரசித்து கேட்க ஒரு மென்பாடல்.

“இலைகள் அனிந்த பூஞ்சிலையே
மனம் இலையுதிர் காலம் கேட்குதடி”

தீம் மியூசிக் – எப்போதும் போல் ஹாரிஸ் படத்தின் தளத்தை பிரதிபளிக்கிறார். 50வது படம் கேட்க்கவா வேண்டும்.

அனைத்து பாடல்களையும் திகட்ட திகட்ட இயற்கை குழைத்து எழுதிய கார்க்கி-க்கு நிச்சயம் சில பல கொத்துகள் அனுப்பலாம்.

வனமகன் – இயற்கை மீது காதல் கொள்ள வைப்பான்

செந்தூரன், மாரன், செங்காந்தள் : ஒர் பாடல்

போகன் படத்தின் ஒரு பாடல் கவிஞர் தாமரை எழுதியிருக்கிறார் அழகு தமிழில். முதல் முறையே மிகவும் எனை ஈர்த்த பாடல் இது. அதனால் இந்த பதிவு சில வார்ததைகளுக்கான விளக்கங்களுடன்.

படிப்பவர்கள் வசதிக்காக விளக்கங்கள் முதலிலேயே தரப்பட்டிருக்கிறது

1.பூபாலன்- பூமியை காப்பாவன் என பொருள்படும்படியான பெயர்
2.செந்தூரா – முருகனின் பெயர்களில் ஒன்று செந்தூரன்
3.செங்காந்தாள் – தமிழ் மாநில மலர், தமிழ் கடவுள் முருகனுக்கு விருப்பமான கார்த்திகை மாதத்தில் பூக்கும் மலர்
4. மாரன்அம்பு ஐந்தும் – மன்மதனின் ஒரு பெயர் தான் மாரன். கரும்பு கரும்புவில்லிருந்து அம்புகள் விடுவான் என பாடியிருக்கிறார்கள். அந்த அம்புகள் மலரினால் ஆனது. மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.
5.கதைப்போமா – பேசுதல்
6. நளபாகம் – சமையல் கலையில் தேர்ந்தவன்
7. வைவாயா – திட்டுதல் என பொருள்படும். இன்றும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வட்டாரத்தில் வழக்கில் உள்ள வார்த்தை

நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஒடி யோசித்தாலும்

நீ தான் மனம் தேடும் மான்பாலன்
பூவாய் எனையேந்தும் பூபாலன் (1)
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

 செந்தூரா (2) ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ (3)
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் (4) வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

 

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பினைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போதும் தோழ் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போம
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா (5)

பாடல் கேட்போமா
ஆடி பார்ப்போமா

மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாதா
இன்பம் எல்லாமே
கையில் வந்தேவிழுமா

நீயின்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா??

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன்அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா

அலைந்து நான் களைத்து
போகும்போது அள்ளி
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம்(6) செய்வாயா?

பொய்யாய் சில நேரம் வைவாயா (7)
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?

செந்தூரா ஆ…! ஆ…! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ…! ஆ…! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ…! ஆ…!
மாரன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா ஆ…! ஆ…!

கண்கள் சொக்க செய்தாயா ஆ…! ஆ…!
கையில் சாய சொல்வாயா ஆ…! ஆ…!
எதோ ஆச்சு வெப்பம் மூச்சில்  ..!
வெட்கங்கள் போயே போச்சு ..!