தலைநகர் செவிடர்கள்

இரண்டு வாரங்களாக போராடும் எம் மக்களை கண்டுகொள்ள மோடி மஸ்தானுக்கு நேரம் இல்லை. ரேடியோவில் மட்டும் பேச நேரம் இருக்கிறது என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. அவர்கள் கேட்கும் கோரிக்கை நியாமானதே. கார் வாங்கவோ அல்லது வீடு கட்டவோ அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கேட்க வில்லை. ஊருக்கு சோறு போட நினைத்து ஏமாந்த கடனைத்தான் தள்ளுபடி செய்ய சொல்கிறார்கள்.

சில காவிகள் கேட்களாம், அதெப்படிப்பா எல்லாரும் கடனை தள்ளுபடி செய்ய சொன்னா எங்க அரசாங்கம் எப்படிப்பா  நடத்த முடியும் என்று. அவர்கள் இந்த லிங்க்கை பார்த்து படிக்கவும். UP Government (BJP) seeking option to waive loans   up

தான் ஜெயித்த இடத்தில் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க நினைக்கும் உங்களுக்கு தலை நகரில் போராடுபவர்கள் கண்ணில் தெரியமாட்டார்களா???

எங்களுக்கு விவசாய பிரச்சனை பத்திலாம் தெரியாது  நாங்க புதிய இந்தியாவை மட்டும் தான் பார்ப்போம் என்று கதறும் தேச பக்தர்களுக்கு கீழ் வரும் படம் .
BJP protest @ Delhi 

bjp protest

ஒரு இடத்தில் சாவை வைத்து போராட்டம் நடத்தி ஆதாயம் பார்க்க தெரிந்தவர்களுக்கு எங்களின் உண்மை போராட்டம் எப்படி தெரியும்.

இந்த லட்சனத்தில் ஆர்.கே நகரில் ப.ஜா.க வெற்றி பெற்றால் மோடியின் நேரடி பார்வை விழுமாம். எங்களுக்கு ஒரு பார்வையும் தேவையில்லை (சில வார்த்தைகளை சபை நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்).

முதலில் எம்மக்களுக்கு தலைநகரில் செவிசாயுங்கள் அப்புறம் பார்வைய பத்தி பேசலாம்.
Tamil-Nadu-Farmers-Delhi-Protest

செவிடன் காதில் ஊதிய சங்காய் தான் இருக்கிறது இப்போதை மத்திய அரசின் நிலைமை. காது கேட்டாக வேண்டும் அல்லது கேட்கப்பட வைக்கவேண்டும்

நாம் கவனிக்கப்படும் தருணம் இது ..!

நேற்று மெரினா போராட்டத்தின் ஐந்தாம் நாள், நானும் எனது நண்பனும் அங்கே மாலை நேரத்தில் சென்றடைந்தோம். நாங்கள் இரண்டு நாள் முன்பு பார்த்த காட்சிகளுக்கும் நேற்றும் நிறைய வித்தியாசம். அந்த வித்தியாசம் தான் இந்த கட்டுரையை எழுத வைத்தது.

அதிகப்படியான சிறு சிறு குழுக்கள் காணக் கிடைத்தன அங்கே.சரி எல்லாரும் ஒன்று பட்டால் நல்லது தானே என நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென ஒரு கோஷத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அதில் ஜல்லிக்கட்டும் இருக்கிறது அவ்வளவே.

இப்படியான ஒரு குழுவில் பாரதமாத படத்துடன் ஒரு பதாகை அதில் ஜல்லிக்கட்டு. இங்கே எதற்கு பாரதமாதா?

இன்னொரு இடத்தில் இருந்த பதாகையில் ஜல்லிக்கட்டு என்கிற வார்த்தை மட்டும் தேசியகொடியின் நிரத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்க ஒரு கட்சி கொடிபோல் தெரிகிறது. இதன் நோக்கம் என்ன?

சில இடத்தில் ஆட்டம் பாட்டம் வேறு. சிலர் கேட்க்கலாம் ஏன் கொண்டாட்டம் கூடாதா? என்று. கொண்டாடலாம் ஆனால் போராட்டத்தில் அதன் கொள்கை தானே முக்கியம்.அப்போது தானே அதன் வீரியம் குறையாமல் இருக்கும்.

அனேக பதாகைகளில் இருக்கும் வார்த்தைகளை இங்கே பதிவிட முடியாது. இங்கே நிறைய பேர் குடும்பமாக வருகிறார்கள். இன உணர்வோடு வருவது சரியே. அதே இடத்தில் இப்படியான பதாகைகள் முகம்சுழிக்க வைக்கின்றன. எனக்கே இப்படி என்றால் பெண்கள், குழந்தைகள் என்ன நினைப்பார்கள்.

இது ஆன்லைனில் கெட்டவார்த்தையுடம் ஹாஸ்டாக்(#Hashtag) போடுபவருக்கும் பொருந்தும்.

இப்படி போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து சமூக பொறுப்புடன் நடந்துகொள்க.

நேற்று நிச்சயமாக மெரினா திருவிழாக்கோலம் கொண்டிருந்தது அதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதில்  அனேக இடங்களில் போராட்டத்தை திசை திருப்பும் விதமாகவே இருந்தது.

img_20170121_145102_hdr

 

இதெல்லாம் மெரினாவில் என்றால், அங்கே செல்லும் இரயிலிலும் இதேதான் மாணவர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் படிக்கட்டில் தான் பயணிக்கிறார்கள். உள்ளே இடம் காலியாக இருக்கும் போதும் (இது நான் கண்டது மாலை 5.30 மணி இருக்கும் 21/01/2017).

போராட்டம் என டிவி யில் காட்டும் இடம் விவேகான்ந்தர் இல்லத்திற்கு நேர் எதிரில் இருக்கிறது. அங்கே மட்டும் ஒழுங்குடன் திசைமாறாமல் இருக்கிறது.

மற்ற இடங்களில் வரும் கோஷங்கள், அர்த்தம் அற்றதாக இருக்கிறது. ஒரு முக்கிய போராட்டம் தேசிய ஊடகங்களால் கவனிக்கப்படுகிறது அப்படி இருக்கையில் நமது கோரிக்கைதானே கோஷங்களாக இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு அர்த்தம் இல்லாத எதுகை மோனை வசனங்கள் எதற்கு?

என்னதான் இருந்தாலும் திரு. பன்னீர்செல்வம் நமது தமிழ் நாட்டின் முதல்வர் அவரும் இப்போது தான் சுதந்திரமாக செயல்பட நினைக்கிறார். அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடுவது முறையல்லவே.

இதே போரட்டாம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்திருக்குமா?? “மூடி டாஸ்மாகை மூடு ” அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறேன்.

அவர் நினைத்திருந்தால் அன்றே அலாங்காநல்லூரிலேயே களைத்திருக்கலாம். அல்லது சில நூறு பேர் இருக்கும் போது மெரினாவில் செய்திருக்கலாம் அதை அவர் செய்யவில்லை. அடக்குமுறை கட்டவிள்க்க படவில்லை. அதற்காகவேனும் மதிப்புடன் விமர்சிக்கலாம்.

இதில் சசிகலா எங்கிருந்து வந்தார், அவரை பற்றி நாம் பேசி பேசி தான் பெரிய ஆளாக ஆக்கிவிடுகிறோம். அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். முக்கியமாக அடைமொழியை யாரும் பயன்படுத்தாதீர்கள்.

தயவு செய்து அரசியல் கலக்காமல் இன்னும் சற்றே ஒழுக்கத்துடன் போராடினால் நன்றாக இருக்கும்.

இந்த கட்டுரை முடியும்   நேரத்தில் தான் பலவாரான புகைப்படங்கள் வருகின்றன அரசியல் விரோதத்தில் குரல் எழுப்பியவர்களின் உண்மை முகங்கள் இதில் அந்த வீர தமிழச்சியும் அடக்கம்.

இவ்வாரனா காரணங்களால் நேற்று எங்களால் ஒரு ஒன்றரை மணி நேரம் கூட அங்கே இருக்க முடியவில்லை (இரண்டு நாட்களுக்கு முன்பு முழு இரவும் அங்கே தான் இருந்தோம்). போராட்டத்தில் அரசியல் விமர்சனம் நாகரீகத்துடன் இருத்தல் நலம்.

அனைவரும் நம்மை உற்று நோக்கும் தருணம் இது. வெண்ணை திரண்டு வரும் போது பானை உடைத்த கதையாகிவிடக் கூடாது.

பொறுப்புடன் இலக்கு நோக்கி பயணிப்போம்.