சாஹோ பார்க்க கூடிய படமே !

சாஹோ படத்தை படத்தோட ஒன்றி பக்கமுடியலைன்னு சொல்றது மட்டும் தான் சரி. மத்தபடி இந்த ரிவியூவர்ஸ் சொல்ற மாதிரி பாக்க முடியாத அளவுக்கெள்ளாம் இல்ல.அதுபோக இந்த ரிவியூஸ் எல்லாத்தையும் கொஞ்சம் கவனுச்சு பாருங்க.

ஒருத்தர் என்னடான்னா படத்தின் இசை யாருன்னு தப்பா சொல்றாரு !
இன்னொருத்தர் கதை எங்க நடக்குன்னு தெரியலைன்னு சொல்றாரு ! அத பட தொடக்கத்துல வாய்ஸ் ஓவர்ல சொல்றாங்க. ஒருவேல அந்த ரிவியூவர் படத்துக்கு லேட்டா போயிருப்பாரு போல
ஒருத்தர் கொஞ்சம் பட்டும் படாம சொல்றாரு.
இவங்களால நடந்த நல்லது ஒன்னே ஒன்னு தான், இந்த படத்துக்கு கவுண்டர் டிக்கெட்டே சுலபமா கிடைக்குது.
ஒருவேளை, இந்த paid reviews இருக்குறது உண்மை தானோ? . ஏன்னா இதவிட மொக்க படமெல்லாம் பாராட்டப்பட்டுருக்கு.
1
சாஹோல இருக்குற பிரச்சனை மொத்தம் 3.
1.ஆக்‌ஷன் காட்சிகளை கொஞ்சம் tone down பண்ணிருக்கலாம்,
2.அப்டியே அந்த bad boy பாட்டுக்கு முன்ன-பின்ன சில நிமிஷம் தூக்கிருக்கலாம் நல்லா இருந்திருக்கும்.
3.அப்புறம் டப்பிங் வசனம், பாகுபலி வெற்றி பெற்றதுக்கு அதன் வசனமும் ஒரு காரணம். அதையும் படக்குழு கொஞ்சம் கவனித்திருந்தால் நிச்சயம் படம் பேசப்பட்டிருக்கும்.
மத்தபடி கதையில்ல, screen இல்ல, play இல்லன்னு சொல்றதெல்லாம் சும்மா. இந்த 3 பிரச்சனைய சரி செஞ்சிருந்தாலே படம் நல்ல ஓடியிருக்கும் என்ன logic இல்லன்னு சொல்லிருப்பாங்க அவ்வளவே.
ஒன்னு மட்டும் நல்ல தெருஞ்சது, தியேட்டர்ல ஒருத்தன் சும்மா சும்மா கமெண்ட் குட்த்துட்டே இருந்தான், வந்து ரிவியூவ் பாத்தாதான் தெரியுது இந்த ரிவியூவர்ஸ் சொன்ன இடத்துல சரியா கத்திருக்கான் இதெல்லாம் பாத்துட்டுத்தான் வந்துருக்கான் போல. இதுக்கு எதுக்கு வரனும் தனக்குன்னு ஒரு ரசனை இல்லாத மாதிரி மாத்திக்குறாங்க போல எல்லாரும்.

உங்கள் கருத்துக்கள்