இந்த கதையில் காதலும் இருக்கலாம்

என்ன விட்டு பொய்றமட்டியே
(ஒரு பெண்ணின் குரல் பின்னனியில் சில வயலின்கள் ஒலிக்கிறது, உருவத்திற்கு சற்றும் பொருந்தாத குரல்கள் ஒரு கொரியன் சீரியலில் – கீழே தொடரும்)
சட்டனெ தன் ஹெட்போன் தவிர்த்து, செல்போன் விட்டு நேர் நோக்குகிறாள்.
எதிரில் அவன்.
பார்த்தும் பார்க்காதுபோல் ஒரு பார்வையை அவன் மீது தூவி,அவனின் தாமத காரணம் கேட்கும் முடிவிலிருக்கிறாள்

என்ன இன்னைக்கு சீரியல்ல மொக்க சீன் போல இப்படி மொறைக்குற என நிலைமையின் தீவிரம் தெரியாது கேட்கிறான்.

ஆமா டா மொக்க சீன் தன் ஆனா சீரியல்ல இல்ல இப்போ இங்க தான்.முக்கியமான விசயம் பேசனும்னு சொன்னா நீ வந்து நிக்குற நேரத்த பாரு..
அவள் வாட்சை அவனிடம் காட்டிகிறாள்.

காதலெனும் முடிவிலியில் நேரம் முக்கியமானது”

நான் புதுசா பிஸ்னஸ் பன்ன போறதா சொன்னேன்ல அதுக்காக லோன் விசயமா அலைய வேண்டியதாபோச்சு அதன்.

காரணம் கேட்கும் நிலையில் அவள் இல்லை, இப்போது அவள் அவளின் பேட்சை கூடகேட்கும் நிலையில் இல்லை.

உன்ன யாரு பிஸ்னஸ் பன்ன சொன்னது ரெண்டுபேர் வாங்குற சம்பளம் பத்தாதா  நளைக்கு குடும்பம் நடத்த??

பத்தும் எத்தன நாளைக்கு உன்னையும் என்னையும் ஒரு அமெரிக்க காரன் வேலைய விட்டு நிருத்துற வரைக்கும், இல்ல இந்தியாவ விட அடிமை வேலைக்கு மளிவான ஆட்கள் கிடைக்குற வர.

காபி ஷாப்ல் இப்போது காதல் இல்லை.”

இருவருக்கும் சேர்த்து அவளே ஆர்டர் செய்கிறாள். இவன் சொல்றது அவளுக்கு புரிந்தாலும் சொசைட்டியை(அதான் அந்த நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களே) நினைத்து யோசிக்கிறாள்.

நேற்று அவள் ப்ரண்ட் சொன்னது,
என்னடி உன் ஆளு அம்பானி ஆன்பிறகுதான் கல்யாணமா
?? நேரா 60ஆம் கல்யாணமா?

என்ன சார்க்கு வேலை சொல்லிதான் பழக்கமா வேலை பார்க்க மாட்டரோ இது இன்னொருத்தி

உங்க முதலாளிட்ட சொல்லி எதாது வேலை வாங்கி குடுங்க இது வேறு ஒருத்தி. இவைகளை எல்லாம் ஒற்றை புன்னகையில் கடக்கிறாள் நித்தமும்.

எல்லாம் தவிர்த்தாலும், அவள் அப்பாவும் அதையே கேட்கிறார். அரசாங்க அதிகாரி அவர் கேட்க்க தானே செய்வார். அவர்களின் மன நிலை அப்படி என்று அவன் விட்டாலும் அவள் விடுவதாக இல்லை. அவளால் அவன் சந்தித்தான் அவரை.

வருங்கால மாமனாராச்சே என ஒரு பொன் மாலைப்பொழுதில் தன் கனவுகளை அவரிடம் மொழி பெயர்த்தான். உலக பொருளாதாரத்தை உள்ளூர் மொழியில் விவரித்தான்.

என்னதான் சொன்னாலும்.இறுதியாக அவர் சொன்னது எல்லாம் நல்லபடியா நடந்து நீ மேலே வர வேண்டுமே?? கேள்வியும் நியாயம் தான்.

நான் வந்து காட்டுறேன் சார்.

காதலா கனவா?? ரெண்டுமா??”

ஒரு தலைமுறைக்கே மாத வருமானம் மிக முக்கியம் என சொல்லி வளர்க்கபட்டிருக்கிறார்கள். வீட்டில் யாரேனும் தொழில் தொடங்குறேன் என சொன்னாக்கூட நமக்கு எதுக்குபா வம்பு. நஷ்டம் ஆகிட்டுனா??

வியாபரத்தில் லாபம் நஷ்டம் ரெண்டும் ஒன்று. ஒரு விளையாட்டு ஆடிப்பார்த்தால் தான் அது புரியும்.

இவன் மேலேவர முடிவேடுத்து துணிந்து செய்த காரியம் வேலையை விட்டது. இதில் தவறு இந்த முடிவை இவளிடம் சொல்லாதது.

இப்போ அமர்ந்திருப்பதும் இது குறித்த விவாதம் தான்.

என்ன சொல்லி புரியவைக்க அவளிடம்?? நோக்கம் சொல்லி புரிந்தாலும் அவள் மனது அதை ஏற்காது.

மொத்தம் மூன்று வழிகள்,

அவன் மீண்டும் ஒரு வேலை தேட வேண்டும் இல்லை, அவள் மனம் மாற வேண்டும் இல்லை, அவன் சூரியவம்சம் சரத் குமார் போல ஒரே பாட்டில் பணக்காரனாக வேண்டும்.

நினைவில் காடுள்ள மிருகம் போல் அவன் மனம் முழுதும் வியாபாரம் சூழ இருக்கிறது.”

இவன் மாறுவது கடினம், அவளும் தான் காதலும் வேண்டும், இவனும் வேண்டும் இந்த வாழ்க்கையும் வேண்டும்.

அவள் மதில் மேல் பூனை போல் இருக்கிறாள், காபி ஷாபில் நம்பிக்கை நிரப்பி போவாள்..

வீட்டில் செண்டிமென்ட் டயலாக் விட்டதும் நம்பிக்கை கரைய தொடங்கும்..

இவனது வாட்ஸப் அலறும்…

இப்போது முடிவெடுத்தாக வேண்டிய கட்டம், அவள் கிட்டத்தட்ட பார்ன் வித் சில்வர் ஸ்பூன். அவனோ அனைத்தையும் உழைத்து ரசித்து கட்டமைத்தான் அவனுக்கான உலகத்தை.

istock-506144458

எளிதில் மாறக்கூடிய மனம் இல்லாதவன் தான் ஆனால் ஆதாரத்திற்கு பங்கம் என்றால். இவள் பேச்சை கேட்டு வேலைக்கு சென்றால். அவன் நம்பிக்கை குறைந்தது போல் இருக்கும். ஒருமுறை நம்பிக்கை அற்றால் மீண்டு வருவதென்பது ரொம்ப கஷ்டம்.

இப்போ அவள் கேட்கிறாள், என்ன முடிவு பன்னிருக்க??

அன்னைக்கு உன் அப்பாட்ட சொன்னது தான். எல்லாம் அவ்வளவு தானா??

இது நான் கேட்க வேண்டிய கேள்வி?

சரி முடிவா என்ன சொல்ற??

நீ எனக்கு வேணும்

அப்போதும் நான் நானாக இருக்கனும்

அவ்வளோதான்

இது எப்படி நடக்கும்?

எனக்கு நம்பிக்கை இருக்கு

எனக்கும் இருக்கு ஆனா எங்க அப்பாக்கு…!

அப்போ நீதான் முடிவு எடுக்கனும். சொல்லி புரியவை.

அது நடக்கிற காரியம் இல்ல

மொளனம் சூழ்கிறது. இருவரும் ஏதும் பேசவில்லை காபி ஷாபின் ஏ.சி சவுண்ட் மட்டும் கேட்கிறது.

அடர்த்தியான மொளனம், உடைக்க இருவரும் தயாராக இல்லை..

அவள் விழி முட்டி நிற்கிறது. அவன் மனம் முட்டி நிற்கிறது.

கேப்பச்சீனோவை கலக்குகிறான், சுழலும் அவள் நினைவுகளை காண்கிறான்.

அவள் அமைதியாக எழுந்து வெளி செல்கிறாள்.

எப்போதும் நம்பிக்கை நிரப்பி செல்லும் அவள், இன்று அவன் நினைவுகள் அனைத்தையும் தூசிதட்டி வரிசைப்படுத்தி ஒரு பேழையில் எடுத்து செல்கிறாள்.

நினைவில் காடுள்ள மிருகத்தின் கடிவாளம் அவிழ்க்கபட்டு இலக்கு நோக்கி தயாராகப்போகிறது.

இனி நினைவில் காடுடன், கயல்விழியாளின் நினைவுகளும் இருக்கும்.